ADDED : ஜூலை 11, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் முதல் பிரிவு போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிகள் மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், சின்னமனுார் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது.
தேனியில் நடந்த போட்டியில் மெஷின்கன்ஸ் அணி, மேனகா மில்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மெஷின் கன்ஸ் அணி 34.5 ஓவரில் 102 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சேசிங் செய்த மேனகா மில்ஸ் அணி 12.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.