/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தரமற்ற உணவு குறித்து புகார் தெரிவிக்கலாம் மாவட்ட நியமன அலுவலர் தகவல்

ADDED : மே 06, 2025 06:45 AM
தேனி: ''வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய 60 தற்காலிக கடைகளுக்கு துறையின் சார்பில், பயிற்சி வழங்கி சான்றிதழ்கள் வழங்கி உள்ளோம்.
தரமில்லாத உணவுப் பொருட்கள் விற்பனை பற்றி வாட்ஸ் ஆப் செயலி மூலம் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கலாம்.'' என, மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்புநியமன அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: உணவுப்பொருட்களை ஆய்வு செய்ய மதுரையில் இருந்து நடமாடும் உணவுப்பொருட்கள் ஆய்வு வாகனம் கொண்டு வந்து ஆய்வுப் பணியில் ஈடுபடுத்த உள்ளோம்.
தற்காலிக கடைகளில் உணவுப் பொருட்கள் தரமின்றி விற்பனை செய்தால், பக்தர்கள் 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் என்றார்.