/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வட்டார கல்வி அலுவலர் விஷமருந்தி தற்கொலை
/
வட்டார கல்வி அலுவலர் விஷமருந்தி தற்கொலை
ADDED : செப் 10, 2025 03:49 AM

தேனி:சின்னமனுார் வட்டார கல்வி அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம், சின்னமனுார் மார்க்கையன்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார், 49; தேனி மாவட்ட தொடக்கக்கல்வி துறையில் சின்னமனுார் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்தார். ஆக., 4 முதல் அலுவலகம் வரவில்லை. அவர் மீது 6 புகார்கள் உள்ளது.
இதன் மீது ஆக., 10ல் தேனி டி.இ.ஓ., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. சதீஷ்குமார் ஆஜராகவில்லை. பணியிடத்திற்கும் செல்லாததால் 'நோ ஒர்க் நோ பே' என்ற அடிப்படையில் அவருக்கு ஆக., மாத சம்பளத்தை நிறுத்தம் செய்து, டி.இ.ஓ., நாகலட்சுமி உத்தர விட்டிருந்தார்.
தேனி, ஊஞ்சாம்பட்டி ரத்தினம் நகரில் வசித்த சதீஷ்குமார், 15 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். சிகிச்சை பெற்றும் நோய் கட்டுக்குள் வராத நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
அவரை ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, சதீஷ்குமார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.