/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொத்து பரோட்டா தயாரிப்பில் சத்தம்: தடுத்தவர் குத்திக்கொலை
/
கொத்து பரோட்டா தயாரிப்பில் சத்தம்: தடுத்தவர் குத்திக்கொலை
கொத்து பரோட்டா தயாரிப்பில் சத்தம்: தடுத்தவர் குத்திக்கொலை
கொத்து பரோட்டா தயாரிப்பில் சத்தம்: தடுத்தவர் குத்திக்கொலை
ADDED : செப் 10, 2025 03:46 AM

தேவதானப்பட்டி:கொத்து பரோட்டாவுக்கு, சத்தமாக பரோட்டா கொத்திய மாஸ்டரை தட்டிக்கேட்டவர், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி, தெற்கு தெருவை சேர்ந்த பழ வியாபாரி சந்தனக்குமார், 28. இவரது மனைவி பாண்டிதேவி, 26. இவர்களுக்கு ஏற்கனவே 5 வயதில் மகள் உள்ள நிலையில், பாண்டிதேவி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். தேவதானப்பட்டி மெயின்ரோடு ஸ்டேட் வங்கி அருகே ஹோட்டலில் சந்தனக்குமார், நேற்று முன்தினம் இரவு கொத்து பரோட்டா வா ங்க சென்றார்.
அவரது தெருவை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் சிவா, பரோட்டாவை கல்லில் கொத்திக் கொண்டிருந்தார். அப்போது, சிவாவிடம், 'ஏன் எரிச்சலுாட்டும் வகையில் அதிக சத்தத்துடன் கொத்து பரோட்டா போடுகிறாய்?' என, சந்தனக்குமார் கேட்டார்.
இதைக்கேட்டு கடுப்பான சிவா, சந்தனக்குமாரை அவதுாறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தனக்குமார் அருகே கிடந்த விறகுகட்டையால் சிவாவை அடித்துள்ளார். சிவா பரோட்டா மாவு வெட்டும் கத்தியால் சந்தனக்குமார் வயிற்றில் குத்தினார்.
இதில், பலத்த காயமடைந்த சந்தனக்குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சிவாவை தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் கைது செய்து விசாரிக்கிறார்.