தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி

மாவட்ட அளவிலான செஸ் போட்டி


UPDATED : அக் 11, 2026 05:54 PM

ADDED : அக் 11, 2026 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 05:54 PM ADDED : அக் 11, 2026 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வனச்சரகர் அமானுல்லா முன்னிலை வகித்தார். சதுரங்க கழக நடுவர் சையது மைதீன் வரவேற்றார். தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவர் திவ்யா, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி பேராசிரியர் மேரிசுபா, வழக்கறிஞர் மேகலா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.

எட்டு வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆத்விக், சர்வேஷ் குமார், தர்ஷன், 10 வயது பிரிவில் வர்ணிக்கா, தஸ்வரத் பிரபாகரன், கிரிட்டிஸ், 13 வயது பிரிவில் சூர்யகுமரன், புவின்ராஜா, சிந்து ஜஸ்வினும் வெற்றி பெற்றனர். பொது பிரிவில் சாத்திவிகா, சாய் சரவணா, தருணிக்காஸ்ரீ வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தேசிய நடுவர் அஜ்மல்கான் போட்டிகளை நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us