ADDED : நவ 02, 2026 06:34 PM
தேனி: மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இயற்பியல், வேதியியல், கணித பாடப்பிரிவு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கலை கல்லுாரியிலும், இன்று (நவ.,2) கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லுாரியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். துணை முதல்வர்கள் கீதாராணி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சிவக்குமார், ஜெகதீஸ்வரன், சிறுமலர், ஆத்திஸ்வரன், ஜாபர் சாதிக்க செயல்பட்டனர். பயிற்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றி கல்லுாரி பேராசரியர்கள் சுஜாதா, கோதை ஆண்டாள், ராஜகுமாரி ஆகியோர் எடுத்துரைத்தனர்.
