UPDATED : நவ 03, 2026 04:08 AM
ADDED : நவ 02, 2026 06:29 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி சடையால் நகர் 3 வது குறுக்கு தெருவில் 25 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அங்கு பல ஆண்டுகளாக ரோடு வசதி முறையாக இல்லை. தற்போது உள்ள மண் ரோடு மேடு, பள்ளமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் நீர் தேங்கி குளமாக மாறுகின்றன. வீடுகளில் உள்ள கழிவுநீர், குழாய் நீர் ரோட்டில் ஓடுவதால் பள்ளங்கள் சேறு நிறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். முதியோர்கள் கீழே தடுமாறியும் விழுகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் ரோடு அமைத்து தர பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பருவமழை தீவிரம் அடையும் முன் அதிகாரிகள் ரோடு அமைத்து தர அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
