/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட அளவிலான தட்டச்சு போட்டி: மாணவர்கள் அசத்தல்
/
மாவட்ட அளவிலான தட்டச்சு போட்டி: மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 14, 2024 05:20 AM

தேனி : தேனியில் நடந்த தட்டச்சு போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்று அசத்தினர்.
தேனி மாவட்ட வணிகவியல் (தட்டச்சு) பள்ளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாவட்ட அளவிலான தட்டச்சு வேகப்போட்டி தேனியில் உள்ள தனியார் மஹாலில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 18 தட்டச்சு பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு 6 வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. போட்டியை கோட்டூர் அரசு பாலிடெக்னிக் முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். தட்டச்சு போட்டி ஒரு மணி நேரம் நடந்தது.
போட்டியில் தேனி ஸ்ரீஅன்னை வணிகவியல் பயிற்சி மைய மாணவி ஸ்ரீநிதி முதல் பரிசு வென்றார். போடி ஹரிணி தட்டச்சு பயிற்சி நிலையம் மாணவி பிரியதர்ஷினி இரண்டாமிடம் பெற்றார். தேனி ஸ்ரீ அன்னை வணிகவியல் பயிற்சி மைய மாணவர் செல்வகுமார் 3ம் இடம் வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை, ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை தேனி மாவட்ட வணிகவியல் (தட்டச்சு) பள்ளிகள் ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் ஜெயகவுரி, தலைவர் மனோகரன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பரிமளாகாந்தி, நிர்வாகிகள் கலை மனோஜ், சாந்தி செய்திருந்தனர்.