/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
/
தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்
ADDED : ஆக 18, 2012 12:04 AM
தேனி: கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர்
கழக தலைவர் கண்ணபிரான் தலைமையில், சுதந்திர தினவிழா நடந்தது.
கிராமக்கல்விக்குழு தலைவர் தங்கராஜ் கொடியேற்றினார். பேச்சு போட்டி,
கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் நிர்மலா
பரிசு வழங்கினார். ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.
வெங்கடாச்சலபுரம் ஸ்ரீ வரத வேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில், பள்ளி
செயலாளர் கிருஷ்ணசாமி, சபா தலைவர் ராஜூ தலைமையில், வக்கீல் கோபால்சாமி
கொடியேற்றினார். பள்ளிக்குழு தலைவர் ஆதிமூலம், சபா தலைவர் சீனிவாசன்
முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயராஜ் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்
ரமேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரியில் துணை முதல்வர் கோமதி வரவேற்றார்.
கல்லூரி இணை செயலாளர் மகேஸ்வரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். கல்லூரி
முதல்வர் சித்ரா வாழ்த்தி பேசினார். கல்லூரி துணை நிலை பேராசிரியர் பாண்டிய
லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர். துணை நிலை பேராசிரியர் வித்யா நன்றி
கூறினார்.வண்டல்கரட்டுப்பட்டி கள்ளர் பள்ளியில், தலைமை ஆசிரியர் பழனிச்சாமி
கொடியேற்றினார். மாகாத்மா காந்தி ஆண்கள் சுய உதவிகுழு அலுவலகத்தில்
முருகன் கொடியேற்றினார். பழனிசெட்டி பட்டி இந்துநாடார் ஆர்.எஸ்.
மெட்ரிக்குலேசன் பள்ளியில், சங்கரநாராயணன் கொடியேற்றினார். தலைவர்
தாழையப்பன் பங்கேற்றனர்.
இந்து நாடார் சீலையம்பட்டி இந்து
நடுநிலைப்பள்ளியில் செயலாளர் சண்முகநாதன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர்
சோமசுந்தரபாண்டியன் பங்கேற்றார்.
கம்பம்: காமயகவுண்டன்பட்டியில் பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர்
சாந்திரவீந்திரன் கொடியேற்றினார். துணை தலைவர் பொன்சரவணன், செயல்அலுவலர்
மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மரக்கன்றுகள் நடப்பட்டது.
கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விவேகானந்தர் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளிகளின் கல்விக்குழு தலைவர் மோகன்தாஸ், கொடியேற்றினார்.
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சுதா
தலைமையில் ஊராட்சி தலைவர் கணேசன் கொடியேற்றினார். ஆனைமலையன்பட்டி அன்னை
மகளிர் கல்வியியல் கல்லூரியில் தாளாளர் ஜெமிலா ரூபி மெஹல் தலைமையில்,
முதல்வர் அப்துல் லத்தீப் கொடியேற்றினார். ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்.,
மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை கீதா கிறிஸ்டி தனசீலி கொடியேற்றினார்.
ஆசிரியர் பால்வண்ணன் முன்னிலை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
நடந்தன.
சின்னமனூர்: மனித உரிமை கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு, ஆட்சிமன்ற குழு
உறுப்பினர் ஹரிஹரன் தலைமை வகித்தார். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து
இனிப்பு வழங்கப்பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் முருகேசன், உட்பட பலர்
பங்கேற்றனர். வர்த்தக சங்கத்தில் நடந்த விழாவிற்கு, தலைவர் பெருமாள் தலைமை
வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் சிவமணி முன்னிலை வகித்தார்.
செயலாளர் காளிமுத்து, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
சின்னமனூர் கே.வி.ஏ., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை
காமேஸ்வரி கொடியேற்றினார். மாணவிகளின் கட்டுரை, பேச்சு, ஓவிய போட்டிகள்
நடந்தன. சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேவதானப்பட்டி: ஜெயமங்லகத்தில் தலைவர் சங்கரலிங்கம் கொடியேற்றினார்.
துணைத்தலைவர் தவமணிராஜா, ஊராட்சி செயலாளர் முருகன்
பங்கேற்றனர்.மேல்மங்கலத்தில் தலைவர் நாகராஜ்,ஜி.கல்லுப்பட்டியில் தலைவர்
வளையாபதி,கெங்குவார்பட்டியில் தலைவர் தமிழன்,அழகர்நாயக்கன்பட்டியில் தலைவர்
ராஜசேகர் கொடியேற்றினர். பெரியகுளம் பாரத ஸ்டேட் வங்கியில், கிளை மேலாளர்
ஜம்புலிங்கம் கொடியேற்றினார். வடகரை கிளை மேலாளர் நவநீதம், செயல்பாட்டு
மேலாளர் விஜயசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொம்மிநாயக்கன்பட்டியில் தலைவர் அப்பாஸ் கொடியேற்றினார். துணைத்தலைவர் பிந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டி: பழனித்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை
ஆசிரியை தமிழ்செல்வி கொடியேற்றினார். ஒக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சரவணமுத்து கொடியேற்றினார்.
போடிதாசன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர்
குழந்தைராஜ் கொடியேற்றினார். மறவபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
ஊராட்சி தலைவர் திருக்காணி கொடியேற்றினார். தலைமை ஆசிரியை விஜயலட்சுமி
தலைமை வகித்தார்.
சக்கம்பட்டி நன்மை தருவார் கோயிலில் மக்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட
தலைவர்ரமணிகணபதி கொடியேற்றினார். மாநில தலைவர் முத்துவன்னியன், செயலாளர்
செந்தில்ராஜன் பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி செல்லம்மாள் கல்வியல் கல்லூரியில் செயலாளர் குபேந்திரன் கொடியேற்றினார். முதல்வர் குருசாமி தலைமை வகித்தார்.
அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை
ஆசிரியர் முத்துமணி கொடியேற்றினார். கொத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை கஸ்தூரி கொடியேற்றினார்.
ஆசாரிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலாஜிராம்
கொடியேற்றினார். லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை
ஆசிரியர் ரகுபதி கொடியேற்றினார்.
ராõபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி
கொடியேற்றினார். ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை
தனபாக்கியம் கொடியேற்றினார்.
பெரியகுளம்: டி.கள்ளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர்
கழகத்தலைவர் குப்புசாமி தலைமையில், தலைமை ஆசிரியை சாரதா
கொடியேற்றினார்.பெரியகுளம் சரஸ்வதி நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியை
கல்பனா தலைமை வகித்தார். பள்ளி செயலர் ராஜா முன்னிலை வகித்தார். கவுன்சிலர்
தங்கராஜ் கொடியேற்றினார். பெரியகுளம் ஹமீதியா நடுநிலைப்பள்ளியில், தலைமை
ஆசிரியர் (பொறுப்பு) அக்கினி முன்னிலை வகித்தார். நிர்வாகி பீர்முகமது
கொடியேற்றினார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நாகராஜன் கொடியேற்றினார்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ரஜியா கொடியேற்றினார்.
வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மகேஸ்வரி
கொடியேற்றினார்.
வருசநாடு:துரைச்சாமிபுரம் ஊராட்சியில் ,தலைவர் செல்லப்பாண்டியன்
கொடியேற்றினார். துணைத் தலைவர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.முத்தலாம்பாறை
ஊராட்சியில் தலைவர் பிச்சைமணி,மயிலாடும்பாறையில், தலைவர்
சடையன்,கடமலைக்குண்டில் தலைவர் அறிவழகன்,பொன்னன்படுகையில் தலைவர்
காத்தமுத்து,குமணந்தொழுவில் தலைவர் செல்வராணி கொடியேற்றினர்.கடமலை-மயிலை
ஊராட்சி ஒன்றியத்தில் பி.டி.ஒ., ரவிக்குமார் கொடியேற்றினார்.ஏ.பி.டி.ஓ.,
ரெங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போடி: திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் செயலாளர் ஜெயபால்
கொடியேற்றினார். உறவின் முறை தலைவர் சூரியன், பள்ளி செயலாளர் ராஜேந்திரன்
தலைமையாசிரியர் பிருதிவிராஜன் பங்கேற்றனர். பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியில்
தலைமையாசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
மாலதி கொடியேற்றினார்.
தேவாரம்: தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்
வெள்ளையப்பன்ராஜ் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் சங்கரன், உதவி தலைமை
ஆசிரியர் சந்திரமோகன், முதுகலை ஆசிரியர் காமராஜ்
பங்கேற்றனர்.டி.செல்லாயிபுரம் யூனியன் பள்ளியில், தலைமை ஆசிரியர்
அங்கயற்கண்ணி கொடியேற்றினார். கிராம கல்வி குழு சார்பில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
டி.ரங்கநாதபுரம் ஊராட்சியில், தலைவர் இளங்கோவன், டி.மீனாட்சிபுரம்
ஊராட்சியில், தலைவர் சுந்தரேஸ்வரன், டி.சிந்தலைச்சேரியில் தலைவர் பரமசிவம்,
தம்மிநாயக்கன்பட்டியில் தலைவர் ஜவஹர், பல்லவராயன்பட்டி ஊராட்சியில் தலைவர்
அழகுமுருகன் கொடியேற்றினர்.