/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர்பு எல்லைக்கு வெளியே மாவட்ட அதிகாரிகள் அரசின் அலைபேசிகள் 'சுவிட்ச்ஆப்'

ADDED : ஜூன் 21, 2025 12:39 AM
தேனி: மாவட்டத்தில் அரசுத்துறை உயர் அதிகாரிகள், அலுவலகங்களுக்கு அரசு வழங்கி உள்ள நிரந்தர அலைபேசி, தொலைபேசி எண்கள் பயன்பாடின்றி உள்ளன. இதனால் அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலை தொடர்கிறது.
மாவட்டத்தில் அரசுத்துறை உயர் அதிகாரிகள், துறை அலுவலகங்களுக்கு அரசு சார்பில் அலைபேசி, தொலைபேசி எண்கள் வழங்கப்படுகிறது.
இந்த தொடர்பு எண்கள் பற்றிய விபரம் மாவட்ட நிர்வாகத்தின் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் உள்ள உயர் அதிகாரிகளின் அலைபேசி, அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் பல எண்கள் பயன்பாடின்றி 'சுவிட்ச் ஆப்' ஆகி உள்ளது.
சில எண்களுக்கு முழு அழைப்பு சென்றாலும் பதில் இல்லை. சில அதிகாரிகள் வேறு மாவட்டங்களுக்கு மாறி சென்றாலும் அவர்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே உள்ளன.
பொதுமக்கள் அரசுத்துறை சார்ந்த குறைகள், புகார்களை தெரிவிக்க அழைத்தாலும் அது பயனின்றி போகிறது. மாவட்ட நிர்வாகம் அரசு இணைய பக்கத்தில் தற்போது பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு விபரங்களை பதிவேற்றவும், அதில் பதிவேற்றி உள்ள தொடர்பு எண்கள் பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.