/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட விளையாட்டு போட்டி கருத்தராவுத்தர் கல்லுாரி சாதனை
/
மாவட்ட விளையாட்டு போட்டி கருத்தராவுத்தர் கல்லுாரி சாதனை
மாவட்ட விளையாட்டு போட்டி கருத்தராவுத்தர் கல்லுாரி சாதனை
மாவட்ட விளையாட்டு போட்டி கருத்தராவுத்தர் கல்லுாரி சாதனை
ADDED : செப் 27, 2024 07:33 AM

உத்தமபாளையம்: முதல்வர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
தேனியில் நடந்த மாவட்ட அளவிலான ஆண்களுக்கான சிலம்ப போட்டியில் 45 முதல் 50 கிலோ எடைப்பிரிவில் இக் கல்லூரி மாணவர் கிஷோர் முதலிடத்தையும், 70 முதல் 75 கிலோ எடை பிரிவில் பிரபாகரன் 2ம் இடத்தையும், நீச்சல் போட்டியில் அருள்முருகன் 2ம்இடத்தையும், 400, 800 மீ., ஒட்டபோட்டியில் ஷாருக் முதலிடத்தையும், கால்பந்து, கிரிக்கெட்டில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மதுரை மண்டல ஜுடோ போட்டியில் யோகேஷ், தீபக் மூன்றாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்றனர்.
மாணவிகளில் சிலம்ப போட்டியில் மஸ்லீனா பாத்திமா முதல் இடத்தையும் , கீர்த்திகா 3ம் இடத்தையும் பெற்றனர்
கேரம் இரட்டையர் பிரிவில் மாரீஸ்வரி, மோனிஷா முதலிடத்தை பெற்றனர். ஒற்றையர் பிரிவில் அபிதா 2ம் இடத்தை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை கல்லூரி தாளாளர் தர்வேஷ் முகைதீன், ஆட்சி மன்ற குழு தலைவர் எஸ். முகமதுமீரான் , முதல்வர் எச். முகமது மீரான், உயர்கல்வி இயக்குநர் அக்பர் அலி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.