/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்
/
மாவட்ட விளையாட்டு போட்டிகள் துவக்கம்
ADDED : ஆக 20, 2025 07:00 AM

தேனி : பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் 14,17,19 வயது பிரிவில் மாணவர்கள், மாணவிகள் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. குறுவட்ட போட்டிகள் கடந்த வாரம் முடிந்தது. இந்நிலையில் நேற்று மாவட்ட அளவிலான போட்டிகள் துவங்கியது.
ஜிம்னாஸ்டிக் போட்டியில் மாணவர்கள் 14வது பிரிவில் மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹேமந்த், 17வயது பிரிவில் மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் குருபாலா, 19 வயது பிரிவில் நாகலாபுரம் பி.வி.எம்., பள்ளி மாணவர் இனேஷ் முதலிடம் வென்றனர். மாணவிகள் பிரிவில் 14வயது பிரிவில் நாகலாபுரம் பி.வி.எம்., பள்ளி மாணவி சஞ்சான கண்ணன், 17 வயது பிரிவில் முத்துதேவன்பட்டி டி.எம்.எச்.என்.யூ., மேல்நிலைப்பள்ளி மாணவி ரேவதி முதலிடம் வென்றனர். ரோடு சைக்கிளிங், வாள்சண்டை, ஸ்குவாஷ் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் முதலிடம் வென்ற மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வானார்கள்.