/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட எறிபந்து போட்டி
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட எறிபந்து போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட எறிபந்து போட்டி
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான மாவட்ட எறிபந்து போட்டி
ADDED : அக் 26, 2025 04:58 AM
தேனி: தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான எறிபந்து போட்டி நடந்தது. போட்டிகள் 12,14,17,19 வயதிற்குட்பட்டு மாணவர்கள், மாணவிகள் பிரிவில் நடத்தப் பட்டது.
மாணவர்கள், மாணவிகள் பிரிவில் 12, 14, 17, 19 வயதிற்குட்பட்ட போட்டிகளில் தேனி கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி முதலிடம் வென்றது. மாணவர்களுக்கான போட்டியில் 12 வயது பிரிவில் கம்பம் பேர்லேன்ட் பள்ளி, 14 வயது பிரிவில் கம்பம் எஸ்.பி.எம்., பள்ளி, 17 வயது பிரிவில் கம்பம் சக்தி விநாயகா பள்ளி, 19 வயது பிரிவில் கம்பம் ஆர்.ஆர்., பள்ளி ஆகிய பள்ளிகள் இரண்டாம் இடம் வென்றன.
மாணவிகளுக்கான போட்டியில் 12வயது பிரிவில் கம்பம் சக்தி விநாயகா பள்ளி, 14, 17 வயதிற்குட்பட்ட பிரிவில் தேனி நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளி, 19 வயது பிரிவில் கம்பம் பேர்லேன்ட் பள்ளி அணிகள் 2ம் இடம் வென்றன.
வெற்றி பெற்ற மாணவர்கள் தேனி கம்மவார் சங்க நிர்வாகிகள் பாராட்டினர். போட்டி ஏற்பாடுகளை கம்மவார் சங்கம் பப்ளிக் பள்ளி முதல்வர் பாலபிரேமா தேவி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

