/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., பேரூராட்சி தலைவர் அறையை பயன்படுத்த தடை; தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
/
தி.மு.க., பேரூராட்சி தலைவர் அறையை பயன்படுத்த தடை; தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
தி.மு.க., பேரூராட்சி தலைவர் அறையை பயன்படுத்த தடை; தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
தி.மு.க., பேரூராட்சி தலைவர் அறையை பயன்படுத்த தடை; தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : மே 16, 2025 07:11 AM
தேவதானப்பட்டி : தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கெங்குவார்பட்டி பேரூராட்சி தி.மு.க., தலைவர் தமிழ்செல்வியை அவரது அறையை பயன்படுத்த விடாமல் தடுப்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரில் அக்கட்சி மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், தி.மு.க., துணைத் தலைவர் ஞானமணியின் மகனுமான ஸ்டீபன் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி ஆதி திராவிடருக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு 2022 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தி.மு.க., 10, அ.தி.மு.க., 3, ம.தி.மு.க., 1, சுயே 1 வெற்றி பெற்றனர். இதில் 6 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழ்செல்வி பேரூராட்சி தலைவராக, 10 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஞானமணி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத்தலைவரின் கணவர் தமிழன் தி.மு.க., செயலாளராக உள்ளார்.
துவக்கத்தில் தலைவர், துணைத்தலைவர் இடையே சுமூக உறவு இருந்தது. பின் பணிகளுக்கு டெண்டர் விடுவது, கான்ட்ராக்டர் தேர்வில் அவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.
பெரும்பாலான தி.மு.க., கவுன்சிலர்கள் துணைத்தலைவருக்கு சாதகமாக இருந்தனர். இதனால் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி ஜனவரியில் முந்தைய கலெக்டர் ஷஜீவனாவிடம் மனுவும் அளித்தனர்.
இந்நிலையில் துணைத் தலைவரின் மகனும் மாவட்ட தி.மு.க., மாணவரணி அமைப்பாளருமான ஸ்டீபன் 42, தலைவர் அறையை பயன்படுத்தவிடாமல் தன்னை தடுப்பதாகவும், 'ஜாதி' பாகுபாடுடன் நடந்து கொள்வதாகவும் தமிழ்செல்வி பெரியகுளம் டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி., பரிந்துரையின்பேரில் எஸ்.ஐ., வேல்மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரித்து ஸ்டீபன் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.