/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி நகராட்சி கூட்டத்தில் தலைவருக்கு எதிராக தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் எதிர்ப்பு கவுன்சிலர்கள் மண்டல இயக்குனருக்கு புகார்
/
தேனி நகராட்சி கூட்டத்தில் தலைவருக்கு எதிராக தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் எதிர்ப்பு கவுன்சிலர்கள் மண்டல இயக்குனருக்கு புகார்
தேனி நகராட்சி கூட்டத்தில் தலைவருக்கு எதிராக தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் எதிர்ப்பு கவுன்சிலர்கள் மண்டல இயக்குனருக்கு புகார்
தேனி நகராட்சி கூட்டத்தில் தலைவருக்கு எதிராக தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் எதிர்ப்பு கவுன்சிலர்கள் மண்டல இயக்குனருக்கு புகார்
ADDED : பிப் 13, 2024 05:07 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் தலைவருக்கு எதிராக துணைத்தலைவர், தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். எதிர்ப்பு கவுன்சிலர்கள் 16 பேர் கையெழுத்திட்டு நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு புகார் அனுப்பினர்.
இந் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு நகராட்சி தலைவர் உட்பட தி.மு.க., 19, அ.தி.மு.க., 7, அ.ம.மு.க., 2, காங்., 3, ஒரு சுயேட்சை கவுன்சிலர் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த கவுன்சிலர் பிரிட்டிஷ் இறந்தார். நேற்று நகராட்சி கூட்டம் நகராட்சித்தலைவர் ரேணுப்பிரியா (தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா முன்னிலை வகித்தார்.
பணியாளர் தீர்மானங்களை வாசிக்கும் போது,' இத் தீர்மானங்களால் மக்களுக்கு பயனில்லை, தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்ற கூறினர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து கவுன்சிலர்கள் கையை உயர்த்தினர். '9பேர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் தலைவர் கூட்டத்தை நடத்தலாம்' என கமிஷனர் கூறினார். 'எதிர்ப்பு தெரிவிக்கும் கவுன்சிலர்களை கமிஷனர் சரியாக கணக்கிடவில்லை', என துணைத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'தீர்மானங்களுக்கு 14 கவுன்சிலர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் 17 கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக', தலைவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தலைவர், கமிஷனர், ஆதரவு கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனை கண்டித்து துணைத்தலைவர் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான சூழல் நிலவியதால் தேனி இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தீர்மானங்களுக்கு எதிர்ப்பு
துணைத்தலைவர் கூறுகையில், '88 தீர்மானங்களில் மொத்த செலவு ரூ.3.71 கோடி. இதில் நகராட்சி செலவு ரூ.1.92 கோடி, பொதுச்செலவு ரூ.1.15 கோடி, வார்டுகளுக்கான செலவு ரூ.63 லட்சம் மட்டுமே.
இதனால் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நலத்திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை மீறிய கமிஷனர் மீது வழக்கு தொடுக்கப்படும்'' என்றார்.நகராட்சி தலைவர் கூறுகையில், 'அனைத்து வார்டுகளுக்கும் சமமாக திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.
ரோடு அமைக்க 3.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதுவும் செய்ய கூடாது என்ற எண்ணத்தில் சிலர் செயல்படுகின்றனர். 17 பேர் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது' என்றார்.
தி.மு.க.,விற்கு பா.ஜ., ஆதரவு
துணைத்தலைவர், அவரது ஆதரவு தி.மு.க., காங்., பா.ஜ., கவுன்சிலர்கள் 16 பேர் இணைந்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், கலெக்டர், நகராட்சி கமிஷனருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில் 16 உறுப்பினர்கள் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கமிஷனர் ஓட்டெடுப்பு நடத்தாமல் ஒருதலைபட்சமாக செயல்பட்டார். தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றிருந்தது. இதில் பா.ஜ. கவுன்சிலர் ஆனந்தி கூட்டத்தில் பங்கேற்க வில்லை. ஆனால் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.