ADDED : நவ 10, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் தனியார் ஓட்டலில் தி.மு.க., சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தொடர்பாக இண்டி கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். வி.சி., கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நாளை தி.மு.க., அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஆலோசிக்கப் பட்டதாக தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆலோசனைக் கூட்டத்தை தேனி நகர நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

