/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்து அபாயத்தில் சுருளி அருவி ரோடு
/
விபத்து அபாயத்தில் சுருளி அருவி ரோடு
ADDED : நவ 10, 2025 12:57 AM

கூடலுார்: கூடலுாரில் இருந்து சுருளி அருவி செல்லும் ரோட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூடலுாரில் இருந்து சுருளி அருவிக்கு கருநாக்கமுத்தன்பட்டி வழியாக செல்லும் 4 கி.மீ., துார ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் கூடலுாரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ள நீர் வெளியேறி ஆங்கூர்பாளையம் விலக்கு அருகே ரோட்டில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் சுருளி அருவிக்கு செல்வதற்கு இவ்வழியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். தற்போது நெல் அறுவடை பணிகள் மும்முறமாக நடந்து வருவதால் விளைப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் அதிகளவில் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
ஆங்கூர்பாளையம் விலக்கு முடிந்தவுடன் வளைவில் இந்த மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு தெரிவது இல்லை. மேலும் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது.
மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

