/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொச்சி- - தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கணக்கிடும் பணி தீவிரம்: பைபாஸ் ரோடு பணிக்காக அறிக்கை தயாரிப்பு

ADDED : நவ 10, 2025 12:58 AM
தேனி: ''கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்.'' என, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் போடி மெட்டு முதல் ஆண்டிபட்டி கணவாய் வரை கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் போடி, தேனி, ஆண்டிபட்டி நகரங்கள் வழியாக நெடுஞ்சாலை செல்கிறது. நகர் பகுதியில் ஏற்படும் நெரிசல் காரணமாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தாமதமாக செல்வது தொடர்கிறது. இதற்காக புதிய பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் போடி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி ஆகிய நகரங்களுக்குள் செல்லாதவாறு பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. அரசு அனுமதி வழங்கிய பின் திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பிற பணிகள் துவங்கும்., என்றார்.