/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பாபிஷேக அழைப்பிதழை வழங்கிய தி.மு.க.,கவுன்சிலர் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில்

ADDED : ஆக 07, 2025 11:59 PM

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழை தி.மு.க., கவுன்சிலர் சாஹிராபானு தலைவர், உறுப்பினர்களிடம் வழங்கி அழைப்பு விடுத்தார்.
நேற்று கவுன்சில் கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 12 வது வார்டு (தி.மு.க.,) முஸ்லிம் கவுன்சிலர் சாஹிராபானு, தலைவர் உள்ளிட்ட அனைவரது இருக்கைக்கு நேரில் சென்று தன் வார்டிலுள்ள செல்வ விநாயகர் கோயிலில் செப்., 4 ல் நடக்கவுள்ள கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்தார். முஸ்லிம் பெண் கவுன்சிலர் கோயில் கும்பாபிேஷக அழைப்பிதழை வழங்கியது மதநல்லிணக்கத்தை பேணுவதாக இருந்தது.