/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் நகராட்சி கூட்டத்தில் கமிஷனரை முற்றுகையிட்டு தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா கதறி அழுத பெண் கவுன்சிலர்
/
கம்பம் நகராட்சி கூட்டத்தில் கமிஷனரை முற்றுகையிட்டு தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா கதறி அழுத பெண் கவுன்சிலர்
கம்பம் நகராட்சி கூட்டத்தில் கமிஷனரை முற்றுகையிட்டு தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா கதறி அழுத பெண் கவுன்சிலர்
கம்பம் நகராட்சி கூட்டத்தில் கமிஷனரை முற்றுகையிட்டு தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா கதறி அழுத பெண் கவுன்சிலர்
ADDED : ஆக 13, 2025 02:18 AM

கம்பம்: கம்பம் நகராட்சி கூட்டத்தில் கடிதம் வாங்க மறுத்த கமிஷனர் ்உமா சங்கரை தி.மு.க., கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர் அபிராமி தன்னை அவதுாறாக பேசுவதாக கூறி கதறி அழுதார்.
கம்பம் நகராட்சி கூட்டம் தலைவர் வனிதா( தி.மு.க.) தலைமையில் நடந்தது. கமிஷனர் உமா சங்கர், துணைத்தலைவர் சுனோதா முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் அ.தி.மு.க. கவுன்சிலர் முருகன், கமிஷனரிடம் கடிதம் வழங்கினார். 'கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கடிதம் வாங்க கூடாது,' என தலைவர், கமிஷனரிடம் கூறினார். உடனே பணியாளர் மூலம் கடிதம் கவுன்சிலரிடம் திருப்பி வழங்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தி.மு.க. கவுன்சிலர்கள் இளம்பரிதி, பார்த்திபன், குமரன், சம்பத் ஆகியோர் , '24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கொடுத்த கடிதத்தை வாங்க மறுப்பது ஏன்', என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தலைவர், 'கூட்டம் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கொடுத்தால் பெற்றுக் கொள்வோம். கூட்டத்தில் வழங்குவதை ஏற்றுக் கொள்ள சட்டத்தில் இடமில்லை,' என்றார்.
இளம்பரிதி, பார்த்திபன் உள்ளிட்ட கவுன்சிலர்கள், 'குறிப்பிட்ட ஒப்பந்தகாரர் செய்யும் பணிகள் தரமில்லை. ரூ.8 கோடியில் கட்டியுள்ள வாரச்சந்தையை ஹாலோ பிளாக்கில் கட்டியுள்ளார். அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்துவதா அபிராமி (தி.மு.க. ): பார்க்கில் கட்டியுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு ரூ.10 லட்சம் டெபாசிட் நிர்ணயம் செய்தது யார், ஏன் கவுன்சிலர்களிடம் கேட்கவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க பார்க்கிறீர்கள்.
முருகன் (அ.தி.மு.க.): வாரச்சந்தை கடைகளுக்கே டெபாசிட் ரூ.2 லட்சம். இந்த கடைகளுக்கு ஏன் ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்தீர்கள்.
தி.மு.க. கவுன்சிலர்கள் கமிஷனர் இடத்திற்கு சென்று கடிதம் கொடுத்தனர். அவர் வாங்க மறுத்து,'என் அறையில் வந்து தாருங்கள் இங்கு வாங்க கூடாது,' என்றார்.
அபிராமி: அஜெண்டா தரும் போது சட்ட விதிகளை பார்க்காத கமிஷனர் எங்கள் கடிதத்தை மட்டும் சட்ட விதிகளை காட்டி வாங்க மறுப்பது ஏன்.
தலைவர்: அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த தி.மு.க. கவுன்சிலர்களே காரணமாக உள்ளனர் என கூறி சென்றார்.
கவுன்சிலர்கள் தர்ணா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர் வைத்திருந்த மினிட், வருகை பதிவேட்டை தருமாறு கேட்டனர். அவர் தர மறுத்து எடுத்து சென்றார். பின்னர் கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் அமர்ந்து தர்ணா செய்தனர்.
அபிராமி (தி.மு.க.) : என்னைப் பற்றி தலைவரின் தரப்பில் மிக இழிவாக பேசுகின்றனர் என கூறி கதறி அழுதார். பிற கவுன்சிலர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
குரு குமரன் (தி.மு.க.): நகராட்சிக்கு வெளியே ஆட்கள் எங்களை தாக்க நிற்கின்றனர். தலைவரின் கணவர் அநாகரீகமாக பேசுகிறார். பின் கமிஷனர் அறைக்கு சென்ற தி.மு.க. கவுன்சிலர்கள், இன்றைய கூட்டத்தில் முதல் மூன்று தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிப்பதாக கடிதம் கொடுத்தனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர்களும் அஜெண்டாவில் 3வது தீர்மானத்தை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு இல்லை என கடிதம் கொடுத்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா செய்தனர். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு டெபாசிட் குறைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம் என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறினர்.