/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் தி.மு.க., தேர்தல் களப்பணி துவக்கம்
/
தேனியில் தி.மு.க., தேர்தல் களப்பணி துவக்கம்
ADDED : ஜூலை 02, 2025 06:27 AM
தேனி : தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன், தெற்கு மாவட்டசெயலாளர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்பதை மையப்படுத்தி தி.மு.க., அரசின் 4 ஆண்டு சாதனைகளுடன், மத்திய பா.ஜ., அரசின் தமிழ்நாடு விரோத போக்கையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
அ.தி.மு.க., பா.ஜ, கூட்டணியால் தி.மு.க.,விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும் சில கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இணைய உள்ளன. வாக்காளர்களின் குடும்பங்களை சந்தித்து தி.மு.க., உறுப்பினர்களாகசேர்க்க வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு மொழியை காக்க ஓரணியில் நிற்க வேண்டும் என்பதுதான், ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கம்.
பொருளாதார ரீதியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு குறித்து மக்களுக்கு விளக்க ஓரணியில் தமிழ்நாடு என்பது பயன்படும். இந்த முன்னெடுப்பில் பொது மக்கள் இணைய 94890 94890 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கலாம், என்றனர். உடன் எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன் (ஆண்டிபட்டி) சரவணக்குமார் (பெரியகுளம்) பங்கேற்றனர்.