/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடிக்கம்பங்களை அகற்ற கூறிய தி.மு.க., பொதுச்செயலாளரின் அறிவிப்பு அதிர்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேச்சு

ADDED : மார் 20, 2025 05:32 AM
தேனி: கொடிகம்பங்களை அகற்ற கூறிய தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகனின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக தேனி பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் பேசினார்.
தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பொதுக்கூட்டத்தில் மாநில செயலாளர் பேசியதாவது:
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை ரோட்டோரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் தங்கள் கட்சியினர் அமைத்துள்ள கொடிமரங்களை அகற்றிவிட்டு தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மற்ற கட்சிகளுடன் ஆலோசித்திருக்க வேண்டும். மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். நீதிபதிகள் அரசியல் கட்சியினர் மீது கோபம் கொண்டு தீர்ப்பு வழங்கி வருகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க.,வினர் தான் அதிக கொடிமரங்களை அமைத்துள்ளனர்.
அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால் கட்சியினர் கட்டணம் செலுத்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்துபவர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம், அரசு துறைகளில் எஸ்.சி., எஸ்.டி., காலிப்பணியிடங்களை நிரப்புவதில் ஏன் அக்கறை காட்டவில்லை.
கருத்துவேறுபாடு இருந்தாலும் தி.மு.க.,வுடன் நாம் சேர்ந்து பயணிக்க வேண்டும். ஒரு ஆட்சியில் வழங்கும் பட்டா மற்றொரு ஆட்சியில் செல்லாமல் போகிறது. மூன்று மாநிலங்களில் கம்யூ., ஆட்சியில் இருந்தும் எந்த முதல்வர் மீதும் ஊழல் புகார் இல்லை என்றார்.