/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை இணைய வழி பயிற்சி முகாம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை இணைய வழி பயிற்சி முகாம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை இணைய வழி பயிற்சி முகாம்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை இணைய வழி பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 03, 2025 12:18 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தி.மு.க., சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதள வழி பயிற்சி முகாம் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மகாராஜன், மாநில தீர்மான குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜா, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் செயலி குறித்தும் அதில் உறுப்பினர்களை சேர்க்கும் முறை குறித்தும் செயல் விளக்கம் காட்டப்பட்டது. கூட்டத்தில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேது ராஜா, நகர செயலாளர் சரவணன், தி.மு.க.,தகவல் தொடர்பு பிரிவு சார்பில் அதிபன் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.