/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தி.மு.க., ஆட்சி என்றாலே கூலிப்படையினர் மகிழ்ச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா பேச்சு
/
தி.மு.க., ஆட்சி என்றாலே கூலிப்படையினர் மகிழ்ச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா பேச்சு
தி.மு.க., ஆட்சி என்றாலே கூலிப்படையினர் மகிழ்ச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா பேச்சு
தி.மு.க., ஆட்சி என்றாலே கூலிப்படையினர் மகிழ்ச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா பேச்சு
ADDED : அக் 15, 2024 05:38 AM

தேனி: தி.மு.க., ஆட்சி என்றாலே கூலிப்படையினர் மகிழ்ச்சி அடைகின்றனர் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா பேசினார்.
தேனியில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமையில் நடந்தது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர்.
மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா பேசியதாவது: தேனி மாவட்டத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. நம்மிடம் இருந்து சென்றவர்களே இங்கு எதிரே நிற்கின்றனர்.
எனவே, இம்மாவட்டத்தில் தனி கவனம் செலுத்த பொதுச்செயலாளர் கூறி உள்ளார். அ.தி.மு.க., ஆலமரம் போன்றது. யார் சென்றாலும் கவலையில்லை.
எனக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு 1995ல் அறிவிக்கப்பட்டது. அதனை வேண்டாம் என கூறி ஒருவருக்கு பரிந்துரை செய்தேன். அவர் சுயநலமாகவும், குடும்பநலத்திற்காக அ.தி.மு.க.,விற்கும் எதிராக செயல்பட்டதால் அவரை கட்சியில் சேர்க்க பழனிசாமி மறுக்கிறார்.அ.தி.மு.க. திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., ஒரு போதும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ததில்லை. அமைச்சர்கள் முதல்வருக்கு பயப்படுவதில்லை. அ.தி.மு.க., கொண்டு வந்த 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை மூடிவிட்டனர். ஆனால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடர்பாக தவறான புள்ளி விபரங்களை வழங்கி ஐ.நா., வில் பாராட்டு பெற்றுள்ளனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தன்மானத்துடன் அந்த கூட்டணி இல்லை. ஆதாயத்திற்காக மட்டும் உள்ளது. தற்போது சாம்சங் நிறுவனம் குஜாராத் மாநிலத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., விற்கு நிர்வாக திறமை இல்லை.
மாநிலத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. தி.மு.க., ஆட்சி என்றாலே கூலிப்படையினர் மகிழ்ச்சி அடைகின்றனர். என்றார்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சோலைராஜா, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முத்துக்கிருஷ்ணன், அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜெயக்குமார், கட்சி பேச்சாளர் சுந்தரபாண்டியன், மகளிரணி மாவட்ட செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.