/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவக்கல்லுாரியில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இடையூறு நடவடிக்கை எடுக்க த.மு.மு.க.,வினர் மனு

ADDED : ஜூன் 05, 2025 04:10 AM

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இடையூறு செய்யும் சில தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி த.மு.மு.க.,வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் த.மு.மு.க., தெற்கு மாவட்ட தலைவர் முகமது ரபீக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவில், ' த.மு.மு.க.,சார்பில் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஜூன் 3ல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்நோயாளியை ஏற்ற கட்சி ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது அங்கு உள்ள சில தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் நோயாளிகளை ஏற்றி செல்லக்கூடாது என மிரட்டினர். சிலர் அதிக கட்டணம் வசூலிப்பதால், பொதுமக்கள் எங்களைப் போன்ற சமூக சேவை இயக்கங்களின் ஆம்புலன்ஸ்களை நாடுகின்றனர். ஆனால் அங்குள்ள சில தனியார் ஆம்புலன்ஸ்கள் இடையூறு செய்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உள்ளனர்.