/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துணை முதல்வருக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
/
துணை முதல்வருக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு
ADDED : ஜூன் 16, 2025 12:31 AM
ஆண்டிபட்டி: துணை முதல்வர் உதயநிதி இன்று தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வழியாக நேற்று இரவு 9:00 மணிக்கு ஆண்டிபட்டி வந்த துணை முதல்வருக்கு திம்மரசநாயக்கனுார் விலக்கு அருகே ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமையில் தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.
காரில் அமர்ந்திருந்த உதயநிதி பின்னர் அதே காரில் நின்றபடி தொண்டர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் கொடுத்த சால்வை, துண்டு, புத்தகங்களை பெற்றுக் கொண்டு, அங்கிருந்து சில நிமிடங்களில் தேனி கிளம்பிச் சென்றார். தேனி வந்தவருக்கு கட்சி நிர்வாகிகள் பட்டாசு, மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தேனியிலும் காரில் நின்றபடி கையசைத்து சென்றார்.
கட்சி ஆலோசனைக் கூட்டம், நிகழ்வுகளை தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் இணைந்து செய்து வருகின்றனர்.