ADDED : ஏப் 27, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் மூன்றாந்தல் பஜார்வீதியில் தி.மு.க., சார்பில் நீர் மோர் வழங்கும் விழா, நகர செயலாளர்
முகமது இலியாஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
எம்.பி.,தங்கத்தமிழ்செல்வன் பொதுமக்களுக்கு நீர்மோர், தர்ப்பூசணி, குளிர்பானங்கள், குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜன், தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.-

