/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பற்றாக்குறை: மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இரவு பணி டாக்டர்கள் இல்லாததால் அவதி
/
பற்றாக்குறை: மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இரவு பணி டாக்டர்கள் இல்லாததால் அவதி
பற்றாக்குறை: மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இரவு பணி டாக்டர்கள் இல்லாததால் அவதி
பற்றாக்குறை: மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இரவு பணி டாக்டர்கள் இல்லாததால் அவதி
ADDED : ஆக 31, 2025 04:11 AM
பெரியகுளம்:: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவிக்கின்றனர். இரவு பணிக்கு வரும் டாக்டர்கள் பெரும்பாலும் ஓய்வு அறையிலே இருப்பதால் நோயாளிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகின்றனர்.
பெரியகுளம் அரசு மருத்துவமனை நூறு ஆண்டுகளை கடந்து, மாவட்ட மருத்துவமனையாக உள்ளது. இம் மருத்துவமனைக்கு பெரியகுளம் தாலுகா பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வருகையும், 200 க்கும் அதிகமான உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இங்கு பொது மருத்துவம், குழந்தைகள் நலப்பிரிவு, பிரசவம் என 35 பிரிவுகள் உள்ளது. இங்கு 40 டாக்டர்கள் முன்பு பணியில் இருந்தனர்.
சிறந்த சேவைக்கு 2015ல் மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்பு வெளிநோயாளிகள் பிரிவு சரியாக காலை 7:30 மணிக்கு துவங்கும். ஆனால் அதற்கு முன்பாக டாக்டர்கள் 7:15 மணிக்கு மருத்துவமனைக்குள் வந்து விடுவர்.
தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. பல டாக்டர்கள் ஓ.பி.,க்கு காலை 8:30 மணிக்கு வருகின்றனர். இதனால் இப் பிரிவில் நீண்ட வரிசையில் நீண்டநேரம் நின்று நோயாளிகள் சிரமப்படுகின்றனர். பலநேரம் தள்ளு, முள்ளு செய்து டாக்டரை சந்திக்க வேண்டியுள்ளது.
இங்கு இரவு பணிக்கு வரும் டாக்டர்கள் பணி நேரத்தில் மருத்துவமனைக்குள் காண்பது அரிதாக உள்ளது. உயிர் காக்கும் அவசரத்திற்கு டூயூட்டி டாக்டர் பற்றி கேட்டால் 'ரவுண்ட்ஸ்' சில் உள்ளார் என்ற ஒரு வரி பதில் இரவு முழுவதும் கூறி பணியாளர்கள் சமாளிக்கின்றனர். இதனை மருத்துவமனை கண்காணிப்பாளர் கண்டுகொள்வதில்லை. இணை இயக்குனர் அலுவலகம் உள்ள மருத்துவமனையிலேயே இந்த அவலம் தொடர்கிறது. பிரசவ வார்டில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தைக்கு ரூ.3ஆயிரம், ஆப்ரேஷன் என்றால் ரூ. 5ஆயிரம், பெண் குழந்தை என்றால் இதில் பாதி கட்டாய வசூல் நடத்துகின்றனர்.
டாக்டர்கள் பற்றாக்குறை:
இங்கு 40 டாக்டர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 32 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் கம்பம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர் என 5 மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனால் 24 மணி நேரம் மாவட்ட அரசு மருத்துவமனை, இரவு நேரத்தை தவிர்த்து பகுதி நேரம் மருத்துவமனையாக மாறி வருகிறது.
கண்காணிப்பாளர் குமார் கூறுகையில், 'டாக்டர்கள் காலி பணியிடம் நிரப்ப மருத்துவ இயக்குனரகத்திற்கு
பரிந்துரை செய்துள்ளோம். இரவு நேரப் பணியில் 'ஓ.பி' அடிக்கும் டாக்டர்களை கண்டறிந்து 'மெமோ' கொடுக்கப்படும் என்றார்.
--