/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியால் டாக்டர்கள் புலம்பல்; புதிய நிபந்தனைகளால் சிரமம்
/
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியால் டாக்டர்கள் புலம்பல்; புதிய நிபந்தனைகளால் சிரமம்
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியால் டாக்டர்கள் புலம்பல்; புதிய நிபந்தனைகளால் சிரமம்
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியால் டாக்டர்கள் புலம்பல்; புதிய நிபந்தனைகளால் சிரமம்
ADDED : மே 03, 2025 06:26 AM
கம்பம் : ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய அரசின் பல்வேறு நிபந்தனைகளால் கால்நடை டாக்டர்கள் புலம்புகின்றனர்.
ஆடுகளை தாக்கும் பிபிஆர் (Pests Despertits Ruminants) நோயை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இந்த பணிகள் மே 27 வரை நடைபெறுகிறது.
மழை காலங்களுக்கு முன் ஆடுகளுக்கு 'மோர்பிளி' என்ற வைரஸ் மூலம் ஆட்டு கொல்லி நோய் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கினால் வாய்புண், காய்ச்சல், மூக்கில் சளி ஒழுகும், கழிச்சல் ஏற்படும், தீவணம் உண்ணாது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த தடுப்பூசி செலுத்த வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய பிபிஆர் கண்ட்ரோல் புரோகிராம் என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி மாநிலங்களுக்கு பிபிஆர் தடுப்பூசிகளை மத்திய அரசு 6 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கி வருகிறது.
- தேனி மாவட்டத்தில் 51 ஆயிரம் செம்மறி ஆடுகளும், 58 ஆயிரம் வெள்ளாடுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கும்.
இந்த ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை நேற்று முன்தினம் ( ஏப். 28 ) துவக்கி மே 27 வரை நடைபெறும். மத்திய அரசின் நிபந்தனைகளால் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டுள்ள டாக்டர்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையில் விசாரித்த போது , ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த தயார். ஆனால் ஆடுகளுக்கு காதில் டேக் அடித்து, சம்பந்தப்பட்ட உரிமையாளருடன் நின்று போட்டோ எடுத்து, அந்த போட்டோவை அப்லோடு செய்ய வேண்டும். அதன்பின் ஆட்டின் உரிமையாளரின் அலைபேசிக்கு ஒடிபி எண் வரும். அந்த ஒடிபி நம்பரை வாங்கி, அதன் பின்பு கம்ப்யூட்டரில் ஆடு, அதன் இனம், வயது, உரிமையாளர் பெயர், விலாசம், ஆதார் எண் போன்ற விபரங்களை அப்லோடு செய்ய வேண்டும்.
மேலும் ஆடுகளின் காதில் டேக் அடிக்க உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என டாக்டர்கள் புலம்ப துவங்கியுள்ளனர். நிபந்தனைகளை தளர்த்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.