/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., அலுவலக வளாகத்தில் நாய் புதைப்பு
/
பா.ஜ., அலுவலக வளாகத்தில் நாய் புதைப்பு
ADDED : ஆக 03, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் மாவட்ட பா.ஜ., கட்சி அலுவலகம் உள்ளது. அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர் உள்ளன. நேற்று மாலை கட்டடத்தின் பின்னால் வலதுபுற மூலையில் நாய்கள் மண்ணை கிளறுவதும், துர்நாற்றம் வீசியது.
எதையோ புதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் அளித்த தகவலின் பேரில் தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையில் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு இறந்த நாயை துணியில் சுற்றி உப்பு, செவ்வந்திப்பூக்களுடன் புதைக்கப்பட்டிருந்தது. புதைத்து 3 நாட்கள் ஆகிய நிலையில் புதைக்கப்பட்ட நாயை தோண்டி எடுத்தனர்.
தேனி போலீசார் வீடியோ பதிவுகளை வைத்து விசாரிக்கின்றனர்.

