UPDATED : அக் 15, 2026 05:41 PM
ADDED : அக் 15, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
கம்பம்: கேரளாவில் வீடுகளில் அதிகபட்சம் மூன்று நாய்கள் மட்டுமே வளர்க்க அனுமதி என அம்மாநில அரசு உத்தரவிட்டது.
கேரளாவில் தெருவில் திரியும் நாய்களை விட, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. எனவே வீடுகளில் வளர்க்கும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. அதன்படி ஒரு வீட்டிற்கு 3 நாய்களுக்கு மேல் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யாமல் வீடுகளில் நாய் வளர்ப்பது குற்றம் என்றும், பதிவு செய்யாமல் வளர்ப்பது தெரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் கேரள அரசு எச்சரித்துள்ளது. இதேபோல் நாய்கள் இனவிருத்தி மையங்களும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
