ADDED : ஜன 18, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நகராட்சி பகுதியில் வினோத நோய் தாக்குதலால் இறந்து வரும் தெருநாய்களை அப்புறப்படுத்தாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் (ஊராட்சி, பேரூராட்சிகள் மட்டும்) நிதி ஒதுக்கி பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
ஆனால் நகராட்சிகளில் இப்பணிகளை முன்னெடுக்க வில்லை. மேலும்வினோத தோல் நோய் தாக்குதல்ஏற்பட்டு ஆங்காங்கே இறந்து நிலையில் உள்ள நாயகளை உடனே அகற்றி நோய் பராவமல் தடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.