/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூங்காவில் பயன்பாட்டுக்கு வந்த 'டோம் தியேட்டர்'
/
பூங்காவில் பயன்பாட்டுக்கு வந்த 'டோம் தியேட்டர்'
ADDED : ஆக 10, 2025 03:18 AM

மூணாறு: மூணாறில் அரசு தாவரவியல் பூங்காவில் ' சூப்பர் ரியாலிட்டி டோம் தியேட்டர்' பயன்பாட்டுக்கு வந்தது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் செல்லும் ரோட்டில் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான தாவரவியல் பூங்கா உள்ளது. அங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை பூக்கள், சிறுவர்களுக்கு பொழுது போக்கு அம்சங்கள், மியூசிக்கல் பவுண்டன் உட்பட பல்வேறு பொழுது அம்சங்கள் உள்ளன.
பூங்காவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ரூ.80 லட்சம் செலவில் உருவாக்கிய ' சூப்பர் ரியாலிட்டி டோம் தியேட்டர்' பயன்பாட்டிற்கு வந்தது. சிறப்பு கண்ணாடி எதுவும் இன்றி 360 டிகிரியில் பயங்கரமான சிலிர்ப்பூட்டும் விஷூவல் காட்சிகளை ரசிக்கலாம். அக்காட்சிகள் 3டி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் தனித்துவமான முறையில் ஒரே நேரத்தில் 30 பேர் காட்சிகளை பார்க்கும் வகையில் தியேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 நிமிடம் காட்சிக்கு நபர் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கான கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. தற்போது ரூ. 100 முதல் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது..
பூங்காவை காலை 9:00 முதல் இரவு 10:00 மணி வரை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.60ம், சிறுவர்களுக்கு ரூ.30ம் வசூலிக்கப்படுகிறது.

