/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரளா, தமிழகத்தில் வரையாடு கணக்கெடுப்பு இன்று துவக்கம்
/
கேரளா, தமிழகத்தில் வரையாடு கணக்கெடுப்பு இன்று துவக்கம்
கேரளா, தமிழகத்தில் வரையாடு கணக்கெடுப்பு இன்று துவக்கம்
கேரளா, தமிழகத்தில் வரையாடு கணக்கெடுப்பு இன்று துவக்கம்
ADDED : ஏப் 24, 2025 05:59 AM

மூணாறு: கேரளா, தமிழகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று (ஏப்.24) துவங்கி ஏப்.27 வரை நடக்கிறது.
கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளது. இரவிகுளம் 1975 மே 31ல் வனவிலங்கு சரணாலயமாகவும், 1978ல் மாநிலத்தில் முதல் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கப்பட்டது. சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, இந்தாண்டு கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் ஒரே நேரத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி ஏப். 27 வரை நடக்கிறது.
கேரளாவில் 89 பிளாக், தமிழகத்தில் 176 பிளாக் ஆகியவற்றில் கணக்கெடுப்பு நடக்கிறது. கேரளாவில் 2016 க்குப்பிறகு இந்தாண்டு திருவனந்தபுரம் முதல் வயநாடு வரை நிலம்பூர், சைலன்ட்வாலி, பெரியாறு ஈஸ்ட், வெஸ்ட், மாங்குளம், மூணாறு, மூணாறு மண்டலம், மறையூர், ரான்னி, திருவனந்தபுரம் வன உயிரின பிரிவு, வரையாடுகள் அதிகம் வாழும் இரவிகுளம் தேசிய பூங்கா உட்பட 19 வன பிரிவுகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. அப்பணியில் நான்கு பேர் வீதம் 95 குழுக்கள் ஈடுபடுகிறனர். அதற்கு நோடல் அதிகாரியாக வனத்துறை கள இயக்குனர் பிரமோத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை தலைமை வன உயிரின பாதுகாவலர் பிரமோத் ஜி.கிருஷ்ணன், மூணாறு வன உயிரின பாதுகாவலர் ஹரிகிருஷ்ணன், உதவி பாதுகாவலர் நிதின்லால் தெரிவித்தனர்.

