வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு: கூடுதலாக 4 ஓட்டுச்சாவடிகள் அமைகிறது
வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு: கூடுதலாக 4 ஓட்டுச்சாவடிகள் அமைகிறது
ADDED : அக் 19, 2026 04:56 PM
தேனி: வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 4 ஓட்டுச்சாவடிகள் கூடுதலாக அமைக்கிறது. 8 ஓட்டுச்சாவடிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி,பெரியகுளம்(தனி), போடி, கம்பம், பெரியகுளம் (தனி) ஆகிய 4 சட்டசடை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1394 ஓட்டுச்சாவடிகள் உள்ளது. 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள ஓட்டுச்சாவடிகள், 2 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியலை கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி வெளியிட்டார். அரசியல் கட்சியினர் பட்டியலை பெற்றுக்கொண்டனர். டி.ஆர்.ஓ., ராஜகுமார் முன்னிலை வகித்தார்.
பெரியகுளம் (தனி) தொகுதியில் 3, போடி தொகுதியில் ஒரு ஓட்டுச்சாவடி என 4 புதிய ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்படுகிறது. ஆண்டிபட்டியில் கட்டட பழுது காரணமாக 3, போடியில் பள்ளி இடமாற்றம் காரணமாக 3, கம்பத்தில் கட்டட பழுது, கட்டடம் இடிக்கப்பட்டது காரணமாக 2 என மொத்தம் 8 ஓட்டுச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் ஒரு வாரத்திற்குள் காலத்திற்குள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். பெரியகுளம் சப்கலெக்டர் தவலேந்து, அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
