/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் ரோடு மறியல்
/
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் ரோடு மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் ரோடு மறியல்
குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் ரோடு மறியல்
ADDED : ஜன 15, 2024 12:20 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் ரங்கசமுத்திரம் ஊராட்சி நாச்சியார்புரத்தில் குடிநீர் வினியோகம் பாதித்ததால் பொது மக்கள் ரோடு மறியல் செய்தனர்.
இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். குன்னுார் வைகை ஆற்றில் இருந்து உறை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் ஆகிறது. வைகை அணை நிரம்பி நீர்த்தேக்கம் குன்னுார் வரை விரிவடைந்ததால் உறை கிணறுகள் மோட்டார் நீரில் மூழ்கி விட்டன.
இதனால் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது. இது குறித்து பொது மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து நேற்று பொது மக்கள் நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன் ரோடு மறியல் செய்தனர். இதனால் ரங்கசமுத்திரம் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஆண்டிபட்டி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன், துணைத் தலைவர் வரதராஜன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வினியோகத்திற்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.