/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'துளி நீரில் அதிக பயிர்' செய்ய சொட்டுநீர் பாசன வசதி
/
'துளி நீரில் அதிக பயிர்' செய்ய சொட்டுநீர் பாசன வசதி
'துளி நீரில் அதிக பயிர்' செய்ய சொட்டுநீர் பாசன வசதி
'துளி நீரில் அதிக பயிர்' செய்ய சொட்டுநீர் பாசன வசதி
ADDED : ஏப் 24, 2025 06:13 AM
தேனி: தோட்டக்கலைத்துறை சார்பில் 'துளிநீரில் அதிக பயிர்' செய்ய 2500 எக்டேருக்கு சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், சொட்டு நீர் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த தண்ணீர் செலவில் அதிக பயிர் சாகுபடி செய்ய முடியும்.
மேலும் உரங்கள் தனியாக வைப்பது உள்ளிட்டவை எளிதாக மேற்கொள்ள இயலும். இந்த நிதியாண்டில் 'துளி நீரில் அதிக பயிர்' என்ற கருப்பொருளை கொண்டு ரூ. 25 கோடி மதிப்பில் 2500 எக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சம் 5 எக்டேர் வரை பயன்பெறலாம்.
மானியமாக 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் என்றனர்.