/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் மர்ம சாவு
/
மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் மர்ம சாவு
மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் மர்ம சாவு
மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் மர்ம சாவு
ADDED : ஜன 05, 2024 04:54 AM

மூணாறு : இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே வண்டன்மேட்டில் மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மூணாறு அருகில் உள்ள பெரியகானல் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் 30. இவர் மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவராக பணியாற்றினார். வண்டன்மேடு பகுதியில் தனியார் நிலத்தில் பணிகள் நடப்பதால் அங்கு தங்கி ஆனந்த் வேலை செய்தார்.
இந்நிலையில் நேற்று காலை பணிக்குச் சென்றவர்கள் ஆனந்த் மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி இறந்து கிடப்பதை பார்த்தனர். சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் வண்டன்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய ஆய்வில் ஆனந்த் சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் இடுக்கியில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தினர்.வண்டன்மேடு போலீசார் விசாரிக்கின்றனர்.