/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டிராக்டர் மோதி சிறுவன் பலி டிரைவருக்கு 30 மாதம் சிறை
/
டிராக்டர் மோதி சிறுவன் பலி டிரைவருக்கு 30 மாதம் சிறை
டிராக்டர் மோதி சிறுவன் பலி டிரைவருக்கு 30 மாதம் சிறை
டிராக்டர் மோதி சிறுவன் பலி டிரைவருக்கு 30 மாதம் சிறை
ADDED : பிப் 11, 2024 01:49 AM

தேனி: தேனியில் டிராக்டர் மோதி 2 வயது சிறுவன் பலியான வழக்கில், டிராக்டர் டிரைவர் ராஜாவிற்கு 30 மாதம் சிறை தண்டணை அளித்து தேனி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.தேனி பொம்மையகவுண்டன்பட்டி ராஜா 26.
இவர் 2021 ஆக., 5ல் பழனிசெட்டிபட்டி வழியாக டிராக்டர் ஓட்டிச்சென்றார். பழனிசெட்டிபட்டியில் சென்ற போது ஆனந்த கிருஷ்ணன் மகன் கவுதம் விஷ்ணு 2, ரோட்டை கடந்தார். அவர் மீது டிராக்டர் மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளி ராஜாவிற்கு 30 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார். அரசு சார்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் வாதாடினார்.