/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கார், சரக்குவேன் மோதிய விபத்தில் டிரைவர் பலி தொழிலாளர்கள் 6 பேர் காயம்

ADDED : ஜன 19, 2025 05:39 AM

தேனி: வீரபாண்டி அருகே கார், சரக்குவேன் மோதிய விபத்தில் வேன் டிரைவர் தர்மாபுரி மணிகண்டன் இறந்தார்.
வீரபாண்டி அருகே தர்மாபுரியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் ராதா, மாரியம்மாள், மலர்கொடி, சரசு, சரவணக்குமார் ஆகியோர் உப்பார்ப்பட்டியில் நடந்து வரும் கட்டுமான பணிக்கு சென்றனர்.
இவர்கள் சென்ற சரக்கு வேனை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஓட்டினர். சரக்கு வேன் திண்டுக்கல்-குமுளி பைப்பாஸ் ரோட்டில் எஸ்.பி.எஸ்., காலனி அருகே வந்த போது, சென்னையில் இருந்து தேக்கடிக்கு சுற்றுலா சென்ற கார், சரக்கு வேனில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் மணிகண்டன், இதில் பயணித்த கட்டிட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் தேனி மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் மணிகண்டன் வழியிலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டட தொழிலாளி மாரியம்மாள் புகாரில், காரை ஓட்டிவந்த சென்னை ஜமீன்பல்லாவரம் அஜித் மீது வழக்கு பதிந்து வீரபாண்டி எஸ்.ஐ., அசோக், போலீசார் விசாரிக்கின்றனர்.