ADDED : ஆக 14, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
போடி, ஆக.
15 -
திருநெல்வேலி பலஸ்தினாபுரம் வாகைகுளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பிளஸ்சி 44. போடி அருகே சிலமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கணவர் பரமசிவம் 47, ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தார். தொடர்ந்து மது குடித்து வந்ததால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பிளஸ்சி புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
