/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் மோதி ஒருவர் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
/
பஸ் மோதி ஒருவர் பலி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
ADDED : ஏப் 25, 2025 07:06 AM
போடி: ரோட்டில் நடந்து சென்றவர் மீது பஸ் மோதி பலியான வழக்கில், தனியார் பஸ் டிரைவர் பகவதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
தேவாரம் திடீர் புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் 2018 ஜூன் 11ல் தேவாரம் சந்தைக்கு பி.எஸ்.என்.எல்., அலுவலக ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அதே பகுதியில் வந்த தனியார் பஸ் பெரியசாமி மீது மோதி பலத்த காயம் அடைந்தார்.
தீவிர சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பெரியசாமியின் மகன் தங்கப்பாண்டி புகாரில் தேவாரம் போலீசார் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் வசிக்கும் தனியார் பஸ் டிரைவர் பகவதி 49,யை கைது செய்தனர்.
இவ்வழக்கு போடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் தவமணிச்செல்வி வாதாடினார். பகவதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 9 அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பழனிவேல்ராஜன் தீர்ப்பளித்தார்.

