/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
/
மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
மாவட்டத்தில் விசர்ஜன ஊர்வலம் ‛'ட்ரோன்' மூலம் கண்காணிப்பு
ADDED : ஆக 28, 2025 05:10 AM
தேனி : மாவட்டத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை ட்ரோன்' கேமராக்கள் மூலம் கண்காணிக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்து விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் 986 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தன. பெரியகுளத்தில் நேற்று விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இன்று தேனி, ராயப்பன்பட்டி, ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, கம்பம், கூடலுார், தேவாரம், பாளையம், கோம்பை, போடி ஆகிய இடங்களில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது. இந்த ஊர்வலத்தில் சுமார் 1100 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது தவிர புது முயற்சியாக ட்ரோன் கேமராக்கள்' பயன்படுத்தி கண்காணிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.