UPDATED : நவ 24, 2026 06:44 PM
ADDED : நவ 24, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் வேளாண் பணியில் பயன்படுத்தப்டும் டிரோன் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லூரி முதல்வர் சரஸ்வதி தலைமை வகித்தார். தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வேளாண் பணிகளில் உரங்கள் தெளிப்பு, பயிர் கண்காணிப்பு, வளர்ச்சி, பாதிப்பு கண்டறிதல் உள்ளிட்ட டிரோன் தொழில்நுட்ப பயன்பாடுகள் பற்றி கோகுலன் எடுத்துரைத்தார்.பயிற்சியை தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய தலைமை செயல் அலுவலர் வசந்தன் செல்வம் செய்திருந்தார்.
