ADDED : ஜூலை 17, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பாரஸ்ட் ரோடு 4வது தெரு ராமச்சந்திரன் 55. இவரது மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் 2 மகன்கள் பராமரிப்பில் வசித்து வந்தார்.
அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 2 நாட்களாக நடமாட்டம் இல்லை. இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் அருகில் வசிப்பவர்கள்
துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தேனி எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் கதவை உடைத்து பார்த்த போது, இறந்த நிலையில் ராமச்சந்திரனின் உடல் கிடந்தது. இறந்து 2 நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியது. உடலை மீட்ட போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.