/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதை இல்லா தேனி: வலியுறுத்தி ஊர்வலம்
/
போதை இல்லா தேனி: வலியுறுத்தி ஊர்வலம்
ADDED : மே 18, 2025 03:22 AM
கூடலுார்: போதை இல்லாத தேனி என்ற முழக்கத்துடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூடலுாரில் டூவீலர் பேரணியை துவக்கினர்.
மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை கஞ்சா கடத்தல் அதிகமாவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதும் இதனால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கப்படுவதால் இதனைத் தடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேனி மாவட்டத்தில் டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கூடலுாரில் துவக்கினர். தேனி மாவட்ட தலைவர் கரன்குமார் தலைமையில், மாநில பொருளாளர் பாரதி துவக்கி வைத்தார். கோஷங்கள் எழுப்பியவாறு கம்பம், உத்தமபாளையம் வழியாக தேவாரம் வரை சென்றனர். இன்று போடியிலிருந்து பெரியகுளம் வரை டூவீலரில் ஊர்வலம் நடக்கிறது.