ADDED : ஜூலை 07, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னமனூர் : சின்னமனூரில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் விகாசா பப்ளிக் பள்ளி மாணவர்கள் சார்பில் நடந்தது.
காந்தி சிலையில் இருந்து துவங்கிய ஊர்வலத்தை நகராட்சி கமிஷனர் கோபிநாத் துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அருகில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் விகாசா கல்வி குழுமங்களின் சேர்மன் இந்திரா, தாளாளர் உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.