/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து மாயமான பாம்பு
/
டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து மாயமான பாம்பு
ADDED : அக் 04, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று அதிகாலை 3 அடி நீள கட்டு விரியன் பாம்பு புகுந்தது.
அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த போலீசார் இருவர் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
போலீசார் பால்பாண்டி மீது பாம்பு ஊர்ந்து சென்றதால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை தூக்கி வீசி உள்ளார். அலுவலக பைல்கள் அடுக்கி இருந்த இடத்தின் மீது விழுந்த பாம்பு அப்பகுதியில் மாயமானது. ஆண்டிபட்டி தீயணைப்பு துறையினர் அலுவலகத்தில் பல இடங்களில் நீண்ட நேரம் தேடியும் பாம்பு பிடிப்படவில்லை. பாம்பு தன்மேல் ஊர்ந்ததால் அதிர்ச்சியில் இருந்த பால்பாண்டி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.