/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செலவு அதிகரிப்பால் உற்பத்தி நிறுத்தம் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்வு
/
செலவு அதிகரிப்பால் உற்பத்தி நிறுத்தம் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்வு
செலவு அதிகரிப்பால் உற்பத்தி நிறுத்தம் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்வு
செலவு அதிகரிப்பால் உற்பத்தி நிறுத்தம் தட்டுப்பாட்டால் செங்கல் விலை உயர்வு
ADDED : ஜன 26, 2024 06:19 AM
கம்பம்: கம்பத்தில் பகுதியில் 15 நாட்களாக செங்கல் உற்பத்தி செய்யாததால் தட்டுப்பாடு நிலவியது. இதனால் விலை உயர்வால் முழுவீச்சில் உற்பத்தியை துவக்கி உள்ளனர்.
கம்பத்தில் 35 செங்கல் சூளைகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. -
கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகமாக இங்கு வந்து செங்கல் வாங்கி செல்வார்கள்.
ஆனால் சமீபகாலமாக அவர்கள் வருவதில்லை. மேலும் உற்பத்திக்கு தேவையான களிமண், செம்மண் போன்றவை தட்டுப்பாட்டால் கூடுதல் விலை கொடுத்து போடி பகுதியில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இதனால் செங்கல் உற்பத்தி செலவு அதிகரித்தது.
இச் சூழலில் செங்கல் விற்பனையில் பெரிய அளவில் தேக்கநிலை ஏற்பட்டது. ஆயிரம் செங்கல் விலை ரூ.5600 என இருந்தது.
இந்நிலையில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக சூளைகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
தட்டுப்பாடு ஏற்பட துவங்கியதை தொடர்ந்து விலை உயரத் துவங்கி உள்ளது. ஆயிரம் கல் விலை ரூ.6 ஆயிரத்திற்கு தற்போது விலை கிடைத்து வருகிறது.
சூளைகளிலும் தற்போது செங்கல் உற்பத்தி துவங்கியுள்ளது.
இது தொடர்பாக கம்பம் செங்கள் சூளை உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், மூலம் பொருள் தட்டுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் விலை உயர்வு உள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு நிச்சயமற்ற தன்மையில் உள்ளது. இதே விலை நீடித்தால் கட்டுபடியாகும் என்றார்

