/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தென் மண்டல சி.பி.சி.ஐ.டி., பிரிவில் போலீசார் பற்றாக்குறையால் சிரமம் கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை

ADDED : டிச 04, 2024 09:31 AM
தேனி : 'போலீசார் பற்றாக்குறையால் வழக்குகளை முடிப்பதில் சிரமம் ஏற்படுவதுடன், நீதிமன்ற பணிகள், குற்றவாளிகளை தேடிச் செல்லும் பணி சுமையால் போலீசார் சிரமம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் பிரிவு 1979ல் சென்னையை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டது. இத்துறையின் அதிகாரிகள் தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்ததனர்.
2000ல் நவீன தடயவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வழக்கு விசாரணை நடந்தது. கூடுதல் டி.ஜி.பி., கட்டுப்பாட்டில் இயங்கும் இத்துறை மேற்கு, தெற்கு, மத்திய,வடக்கு மண்டலங்களாக பிரித்து இயங்கி வருகிறது.
இதில் தென் மண்டலம் ஆன மதுரை சரகம் அதிக மாவட்டங்களை உள்ளடக்கி, அதிக வழக்குகளை விசாரிக்கிறது. தென் மண்டலத்தில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன. இதில் மதுரை நகர், மதுரை சரகம், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட ஏழு அலுவலகங்கள் இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் இயங்குகின்றன. இதில் ஒவ்வொரு இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் ஒரு எஸ்.ஐ., எழுத்தர், போலீஸ்காரர்கள் மூவர் என தலா ஆறு பேர் மட்டும் பணியில் உள்ளனர். போலீசார் பற்றாக்குறையால் பணிகளை எஸ்.பி., உத்தரவிட்ட காலத்திற்குள் முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தென்மண்டல சரகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஒரு டி.எஸ்.பி., எனவும், மாவட்டங்களில் கூடுதலாக இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் கூடுதலாக தலா 5 போலீஸ்காரர்களை நியமிக்கவும், கூடுதல் டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க போலீசார் கோரியுள்ளனர்.